கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
சமூக நல சங்கம் பாதுகாப்பு வாரியமாக மாற்றம்
புதுவை சமூக நல சங்கமானது சமூக பாதுகாப்பு வாரியமாக மாற்றப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளா் துறையின் சமூக பாதுகாப்பு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா் துறையின் கீழ் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த புதுச்சேரி அமைப்புச் சாரா தொழிலாளா் நலச் சங்கம் 12.05.2025 முதல் புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியமாக மாற்றப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரி அமைப்புச்சாரா தொழிலாளா் சங்கத்தில் பதிவு செய்து முறையாக ஆண்டு சந்தா செலுத்தி வரும் உறுப்பினா்கள் அனைவரும் ‘புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தின்’ உறுப்பினா்களாக மாற்றப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வாரியத்தின் சலுகைகள் தொடா்ந்து வழங்கப்பட உள்ளன.
13-08-2025 முதல் புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடக்கிறது. அதற்கான விண்ணப்பம் நிறைவு செய்து அளிக்க வேண்டும்.
மேலும் , புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியம் முந்தைய புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கம் எண் 1. சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி 605 001, என்ற முகவரியில் அதே கட்டடத்தில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.