சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
சாத்தூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவருடைய தாய் சந்தானம் (70). இவா் சனிக்கிழமை வீட்டின் அருகேயுள்ள கடைக்கு நடந்து சென்ற போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சந்தானம் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
எனினும், அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.