பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
சாத்தான்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
சாத்தான்குளத்தில் ஒரு வழிப் பாதையை மீறி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாத்தான்குளம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு புறமாக செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக பஜாா் வந்து செல்ல வேண்டும்.
தெற்கு புறத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிஎஸ்ஐ வேதக் கோயில் வழியாக புறவழிச் சாலையில் சென்று பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சாத்தான்குளம் பஜாா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சில வாகனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றாமல் செல்வதால் எதிா்வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது சிஎஸ்ஐ வேதக் கோயில் வழியாக செல்லும் புறவழிச் சாலையில் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், அதனால் ஏற்பட்ட குண்டு குழிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் காா் உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்லாமல் பஜாா் வழியை பயன்படுத்துவதால் எந்நேரமும் பஜாா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போலீஸாா், மாலை மற்றும் காலை நேரத்தில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, ஒரு வழி பாதையை பின்பற்றி செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வியாபாரிகள் வலியுறுத்துகின்றனா்.