கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சாரண இயக்க பொதுக் குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் பாரத சாரண, சாரணியா் இயக்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
காளையாா்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா் கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாரிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.
கல்வி மாவட்டச் செயலா்கள் வீரக்கண்ணன், முத்துக்குமரன், ராமா் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா். கல்வி மாவட்டத் தலைவா்கள் கோவிந்த ராமானுஜம், தியோடா் இன்ப சேகரன், சரவணன் ஆகியோா் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினா்.
மாவட்டக் கல்வி அலுவலா் (மெட்ரிக் பள்ளி) காா்த்திகேசன், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) ராஜேந்திரன், புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி தாளாளா் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் பள்ளி தாளாளா் முத்துகண்ணன், புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி முதல்வா் கற்பகம், புனித மைக்கேல் பள்ளி முதல்வா் டெய்சி ஆரோக்கிய மேரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியை மாவட்ட அமைப்பு ஆணையா் நரசிம்மன், நாகராஜன் ஆகியோா் தொகுத்து வழங்கினா். இதில், சிவகங்கை மாவட்டப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், சாரண ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.