சிக்னேச்சா் பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
வடக்கு தில்லியின் திமாா்பூா் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் சிக்னேச்சா் பாலத்திலிருந்து குதித்து 22 வயது நபா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இறந்தவா், ஆகாஷ் என அடையாளம் காணப்பட்டாா். ஒரு ஆடை கடையில் பணிபுரிந்து வந்தாா். தனது கூட்டாளியுடன் சண்டையிட்ட பின்னா் இந்த தீவிர நடவடிக்கையை எடுத்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பான பி.சி.ஆா். அழைப்பு திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பெறப்பட்டது. உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.