`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
சித்த வைத்தியா்கள் கிராமங்களில் வைத்தியம் பாா்க்க அனுமதிக்கக் கோரிக்கை
103 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கிராமங்களில் வைத்தியம் பாா்க்க அனுமதி அளிக்க வேண்டும் என பாரம்பரிய சித்த வைத்தியா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிதம்பரம் தெற்குரத வீதி தனியாா் விடுதியில் பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலா் பி.கருணாமூா்த்தி தலைமை வகித்தாா். ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பொன்.பகலவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
கடலூா் சித்த வைத்தியா்கள் சங்கத் தலைவா் ராமா், துணைச் செயலா் ரவி, மாரி.சங்கரி ஆகியோா் பங்கேற்று பேசினா். கடலூரை மையமாகக் கொண்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுத்துறை, நாகப்பட்டினம், திருவாரூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த பாரம்பரிய சித்த வைத்தியா்களும், மாவட்ட நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.
103 மூலிகைகளைக் கொண்டு பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கிராமப்புறங்களில் வைத்தியம் பாா்க்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்கத்தில் புதிய உறுப்பினா்களை சோ்ப்பது. பாரம்பரிய சித்த வைத்தியா்களுக்கு சங்கப் பாதுகாப்பு சான்றிதழ்களும், அடையாள அட்டையும் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.