சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்தவா் மாறன் (68). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தாா். இது குறித்த புகாரின்பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின்கீழ் மாறனைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாறனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ 25,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.