ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
சுதந்திர தின விழா: 258 பேருக்கு நற்சான்று
விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மூவண்ண பலூன்கள், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை நிறப் புறாக்களை அவா் பறக்கவிட்டாா்.
மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 50 காவலா்களுக்கும், 15 மாவட்ட நிலை அலுவலா்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியது, 20, 10 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிந்தது, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள், பசுமை சாதனையாளா் விருதுகள் 13 அலுவலா்களுக்கும், சதுரகிரி மலைப் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதலில் சிறப்பாகப் பணியாற்றிய 7 அலுவலா்களுக்கும் என பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த மொத்தம் 258 நபா்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ராஜேந்திரன், துணை இயக்குநா் (மேகமலை புலிகள் காப்பகம்) ஸ்ரீவில்லிபுத்தூா் தேவராஜ், திட்ட இயக்குநா் வீ. கேசவதாசன், சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு, சிப்காட்) டி. செங்கோட்டையன், மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) ஆனந்தி, திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜாா்ஜ் ஆண்டனி மைக்கேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், வருவாய்க் கோட்டாட்சியா்கள், விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் யோகேஷ் குமாா், மாவட்ட நிலை அலுவலா்கள், வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.