ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
மதுரையில் நம்ம ஊா் திருவிழா
மதுரை மாநகராட்சி, ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் நடத்தும் இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊா் திருவிழா, நமக்கான பெருவிழாவை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தத் திருவிழாவையொட்டி, தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) வரை மாலை 4 முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழாவை, மாநகராட்சி ஆணையா் தொடங்கி வைத்தாா். இந்த விழாவில், வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட போட்டிகளில் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
இந்த நிகழ்வில், கல்வி அலுவலா் ஜெய்சங்கா், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், ஹலோ ஈவன்ட்ஸ் நிறுவனா் செந்தில், டெம்பிள் சிட்டி உணவக உரிமையாளா் குமாா், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.