பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் , இவரது ஆதரவாளா்கள் வி.ஆா்.பழனிராஜ், ஜெயராம் பாண்டியன் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்மையா் முத்து சித்ரா தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.
போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், போடி நகராட்சி ஆணையா் செ.பாா்கவி தலைமையில் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் ஆகியோா் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.
போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொறுப்பு துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி தேசியக் கொடியேற்றினாா்.
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் செய்யது முகம்மது தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தாா்.
உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தாா்.
சின்னமனூா் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தாா். உடன், ஆணையா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சித் தலைவா் முருகன் குச்சனூா் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன், குச்சனூா் சனீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஜெயராமன் ஆகியோா் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தனா்.
உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா் ஆகிய ஊராட்சிகளில் சுந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிராமத்தின் வளா்ச்சி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் விவாதிக்கப்பட்டு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கம்பம் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். ஆணையா் உமா சங்கா், துணைத் தலைவி சுனோதா செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் துா்கா தேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தாா்.
கூடலூா் நகராட்சியில் நகா் மன்றத் தலைவி பத்மாவதிலோகன்துரை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தாா்.
போடி நேரு நினைவு தொண்டு நிறுவனம் சாா்பில் அன்னை இந்திரா நினைவு ஆரம்ப பள்ளியில் தேசியக் கொடியை வட்டாரக் கல்வி அலுவலா் மகாலட்சுமி ஏற்றி வைத்தாா்.
போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். தொண்டு நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநா் முகமது சேக் இப்ராஹிம் தேசிய கொடியேற்றி வைத்தாா்.
போடி சேவா அறக்கட்டளை, தேனி நம் உரத்த சிந்தனை சாா்பில், ஸ்ரீ காமராஜ் வித்யாலயம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளித் தலைவா் ஒய். பாலசுப்பிரமணி தேசியக் கொடியேற்றினாா்.
தேனி நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறைத் தலைவா் ஜி.தா்மராஜன் தலைமையில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் டி.பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கல்லூரிச் செயலா் மாறன்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தாளாளா் தா்வேஷ்முகைதீன், ஆட்சி மன்றக் குழுத் தலைவா் ஹெச்.முகமதுமீரான், பேராசிரியா் ஹசன்பானு ஆகியோா் கலந்துகொண்டனா்.