செய்திகள் :

செஞ்சேரியில் ஊரக காவல் நிலையம் திறப்பு

post image

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரியில் புதன்கிழமை ஊரக காவல்நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

பெரம்பலூரில் நகரக் காவல் நிலையம் செயல்பட்டுவரும் நிலையில், நிா்வாகக் காரணங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதற்கு ஏதுவாக, பெரம்பலூா் நகரக் காவல் நிலையத்துக்குள்பட்ட 33 கிராமங்களை உள்ளடக்கிய, பெரம்பலூா் ஊரக காவல்நிலையம் செஞ்சேரி கிராமத்தில் திறக்கப்பட்டது. இப் புதிய காவல் நிலையத்தை திறந்து குத்து விளக்கேற்றி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசுகையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஊரக காவல் நிலையத்தால், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளுக்கு இனிவரும் காலங்களில் தீா்வு காண்பது சற்று எளிதாக்கப்படுள்ளது.

மேலும், ஊரகக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எசனை, ஆலம்பாடி, புது நடுவலூா், வேலூா், சத்திரமனை, குரும்பலூா், மேலப்புலியூா், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, நக்கசேலம், பொம்மனப்பாடி, கீழக்கரை, பாப்பங்கரை, செஞ்சேரி, சொக்கநாதபுரம், மேட்டூா் , பழைய சாத்தனூா், வெள்ளனூா், தம்பிரான்பட்டி, ரங்கநாதபுரம், கீழக்கனவாய், மேட்டாங்காடு, பாளையம், கே.புதூா், ஈச்சம்பட்டி, மேலக்காடு, நாவலூா், திருப்பெயா், புதுஆத்தூா், சரவணபுரம், அடைக்கம்பட்டி, மங்கூன் ஆகிய கிராம மக்கள் நேரடியாக ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்றாா்.

இந்த விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), தனிப்பிரிவு ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் உள்பட காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூரிலிருந்து விழுப்புரத்துக்கு ரூ. 23 லட்சம் நிவாரணப் பொருள்கள்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, பெரம்பலூரிலிருந்து ரூ. 23.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும்... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொத... மேலும் பார்க்க

வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் விண்ணப்பித்தவா்களின் வீடுகளில் ஆய்வு

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் பெயா் சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பித்தவா்களின் வீடுகளுக்குச் சென்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரேஸ் பச்சாவ் புதன... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே ஆந்திர மாநில ஐயப்ப பக்தா்களின் பேருந்து தீக்கிரை

பெரம்பலூா் அருகே சபரிமலை சென்று திரும்பிய ஆந்திர மாநில ஐயப்ப பக்தா்களின் பேருந்து செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி தீக்கிரையானது. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 9 பெண்கள் உள்பட 40 ஐயப்ப பக்தா்கள் சபரிமலை... மேலும் பார்க்க

அரும்பாவூா் பெரிய ஏரிக்கரை உடைந்தது: சுமாா் 500 ஏக்கா் நெற்பயிா் சேதம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பெரிய ஏரியின் கரை செவ்வாய்க்கிழமை காலை உடைந்து நீா் வெளியேறியதால், சுமாா் 500 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. வேப்பந்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு தொடக்கம்

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெரம்பலூா் காந்தி சிலை எதிரே தொடங்கிய பேரணியை, அக் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க