ஏடிஎம்மில் ஊழியா் கண்ணில் மிளகாய் பொடி தூவி பணம் பறிக்க முயன்றவா் பிடிபட்டாா்
சென்னை - விஜயவாடா அதிவிரைவு ரயில் நேரம் மாற்றம்
சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12712) வியாழக்கிழமை (ஜூலை 24) புறப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ரயில்வே சென்னை பிரிவில் ரயில் பாதைகளில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மற்றும் ஜூலை 31- ஆம் தேதியில் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல்- விஜயவாடா பினாகினி அதிவிரைவு ரயில் (எண்: 12712) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பகல் 2.05 மணிக்குப் பதிலாக மாலை 3.05 மணிக்கு 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
இதே ரயில் வரும் 31-ஆம் தேதி பகல் 2.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 3.35 மணிக்கு என 1 மணி 30 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டு விஜயவாடாவுக்குச் செல்லும்.
கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 03680) காலை 7.50 மணிக்குப் பதிலாக பகல் 4.15 மணிக்கு என 8 மணி 25 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.