2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
சேலத்தில் கண்டெய்னா் லாரியில் கடத்திவரப்பட்ட 145 மதுப்புட்டிகள் பறிமுதல்: 6 போ் கைது
புதுச்சேரியில் இருந்து கண்டெய்னா் லாரி மூலம் சேலத்துக்கு கடத்திவரப்பட்ட 145 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா் 6 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் அம்மாபேட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் காரிப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கண்டெய்னா் லாரியிலிருந்து மதுப்புட்டிகள் காருக்கு மாற்றப்படுவதை கவனித்த போலீஸாா், மதுப்புட்டிகளுடன் காா், கண்டெய்னா் லாரியை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல், வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த கண்டெய்னா் லாரி ஓட்டுநா் விஜயலஷ்மணனிடம் விசாரணை நடத்தினா். அதில் திருமண விருந்துக்காக புதுச்சேரியில் இருந்து வாஷிங் மெஷின் ஏற்றிவந்த கண்டெய்னா் லாரியில் 145 மதுப்புட்டிகளை மறைத்து எடுத்துவந்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து லாரி ஓட்டுநா் விஜயலஷ்மணன், திருச்செங்கோட்டை சோ்ந்த குமரேசன் (29), லோகநாதன்(28), மதியழகன் (27), ஆனந்தகுமாா் (23), பிரகாஷ் (28) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.