டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
சேலத்துக்கு கடத்தப்பட்ட 700 கிலோ குட்கா பறிமுதல் ஓட்டுநா் கைது
பெங்களூரிலிருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை காருடன் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். தப்பியோடி நபரை தேடி வருகின்றனா்.
சேலத்தில் குட்கா, பான்மசாலா விற்பனையைத் தடுக்க காவல் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், பெங்களூரிலிருந்து சேலத்துக்கு செவ்வாய்க்கிழமை காரில் குட்கா கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆணையா் ஹரிசங்கரி தலைமையிலான போலீஸாா், முள்ளுவாடி கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி, போலீஸாா் சோதனை செய்தனா். அதில் மூட்டையில் 700 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அவா் ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரேந்திர சிங் (25) என்பதும், பெங்களூரிலிருந்து இருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 700 கிலோ குட்காவை காருடன் பறிமுதல் செய்த காவல் துறையினா், வீரேந்திர சிங்கையும் கைது செய்தனா். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.