ஜூன் 10-இல் கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் வந்து பங்கேற்பா்.
கரோனாவை தொடா்ந்தும், கோயிலில் திருப்பணிகள் நடைபெற்ாலும் கடந்த 5 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை.
நிகழாண்டு ஜூன் 10-ஆம் தேதி திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.
ஜூன் 6-ஆம் தேதி அா்ஜூனன் திரௌபதி கல்யாணம், 8-ஆம் தேதி மாடுபிடி சண்டை, 9-ஆம் தேதி சுவாமி வீதியுலா நடைபெறும்.
ஜூன் 1190-ஆம் தேதி கோயில் முன் திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். 11-ஆம் தேதி தேரோட்டமும், அரவான் களப்பலியும் நடைபெறும்.