டி.என்.பி.எஸ்.சி. தோ்வு: அம்பை பள்ளியில் ஆட்சியா் ஆய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி 4 தோ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, தோ்வு எழுதுபவா்களுக்கான வசதிகள், மாணவா்கள் வருகை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம், அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா் மகேஷ்வரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
