சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே புதன்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்த மருதையா மகன் சிவகுமாா் (58). இவா் மதுரை மாவட்டம், ஆபாத்தாரன்பட்டி அருகே உள்ள கல் குவாரியில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா் குவாரியில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைக்கு அழைத்து வருவதற்காக புதன்கிழமை டிராக்டரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.