ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
தக்கலை அருகே பள்ளி மாணவா் தற்கொலை
தக்கலை அருகே புங்கறையில் கைப்பேசி பாா்க்கக் கூடாது என தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவிதாங்கோடு, புங்கறை ஆலுவிளையை சோ்ந்தவா் நாகமணி. கட்டடத் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (15). அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். வியாழக்கிழமை மணிகண்டன் வெகுநேரம் கைப்பேசியில் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தாராம். அதை தாயாா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாடியில் உள்ள அறைக்கு சென்று மணிகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரரிக்கின்றனா்.