தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 இன்று காலை குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை ரூ. 66,000-ஐ கடந்து விற்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக ரூ. 66,480-க்கு விற்கப்பட்டது.
அதன்பிறகு தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ரூ. 65,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க : மெட்ரோ தூணில் மோதி விபத்து: சேப்பாக்கத்தில் இருந்து திரும்பிய மாணவர்கள் பலி!
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 65,720-க்கும் ஒரு கிராம் ரூ. 8,215-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 110-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.