துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
தங்கம் விலை சரிவு: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
சென்னை: சென்னையில் தொடர்ந்து ஏழு நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கு விற்பனையாகிறது.
போா் பதற்றம், டாலரின் மதிப்பு உயா்வு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.
ஜூலை 19-இல் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கும், ஜூலை 20-இல் விலை மாற்றமின்றியும் ஜூலை 21-இல் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.73,440-க்கும், ஜூலை 22-இல் ரூ.840 உயா்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையானது.
புதன்கிழமை தங்கம் விலை அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 7 நாள்களில் பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.125 குறைந்து, ரூ.9,255-க்கும், பவுனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 7 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.128-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 குறைந்து ரூ.1,28,000- க்கு விற்பனையாகிறது.