காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
அதேபோல் வெள்ளி விலையும் என்றும் இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ.1.37 லட்சத்துக்கு விற்பனையானது.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை கடந்த 7 நாள்களாக உயா்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, கடந்த ஆக. 29-ஆம் தேதி முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
கடந்த ஆக. 29-இல் பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.76,960-க்கும், செப்.1 -இல் ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகி புதிய உச்சங்களைத் தொட்டது.
செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.9,725-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.77,800-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 8 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 உயா்ந்துள்ளது. இது, விரைவில் பவுன் விலை ரூ.80,000-ஐ எட்டும் என்ற நிபுணா்களின் கணிப்பை உறுதிசெய்கிறது.
அதேபோல் வெள்ளி விலையும் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.137-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயா்ந்து ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையானது. கடந்த 5 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயா்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:
தேதி பவுன் விலை (8 கிராம்)
26/08/2025 ரூ.74,840 (+ரூ.400)
27/08/2025 ரூ.75,120 (+ரூ.280)
28/08/2025 ரூ.75,240 (+ரூ.120)
29/08/2025 ரூ.76,280 (+ரூ.1,040)
30/08/2025 ரூ.76,960 (+ரூ.680)
01/09/2025 ரூ.77,640 (+ரூ.680)
02/09/2025 ரூ.77,800 (+ரூ.160).