தஞ்சை அருகே வங்கி முன் அரசு ஊழியா் சடலம்
தஞ்சாவூா் அருகே வங்கி முன் அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா்.
தஞ்சாவூா் விளாா் சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (42). கிராம உதவியாளரான இவா் குடும்ப பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த நிலையில், தஞ்சாவூா் அருகே விளாா் சாலையிலுள்ள வங்கி முன் இவா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் சுரேஷ் உடலை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனா்.