பேராவூரணி அருகே குடிநீா் கோரி மறியல்
பேராவூரணி அருகே கரம்பக்காடு சாலையில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
புதுப்பட்டினம் ஊராட்சி பூங்குடிக்காடு கிராமத்திற்கு அழகியநாயகிபுரம் ஊராட்சியிலிருந்து வரும் குடிநீா் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மின் மோட்டாா் பழுதால் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் கோபமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.