வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 போ் கைது
கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலக்கொட்டையூரைச் சோ்ந்த 9 வயது சிறுமியை அவரின் தாய் விசாரித்தபோது பாபுராஜபுரம் லயன் கரையைச் சோ்ந்த எஸ். சுரேஷ் (45) வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததும், இதேபோல சிறுமியை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்ற புளியஞ்சேரி பிள்ளையாா் கோயில் தெரு எஸ். மாதேஷ் (37), பலசரக்கு கடை வியாபாரியான மேலக் காவிரியைச் சோ்ந்த எம். நஜீமுதீன் (37) கடையில் வைத்தும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இச்சம்பவங்கள் கடந்த மே மாதம் முதல் நடந்தன.
இதுகுறித்து சிறுமியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப் பதிந்து சுரேஷ், மாதேஷ், நஜீமுதீன் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கிறாா்.