ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபா்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் அலுவலா்கள் மூலம் பொதுமக்களுக்கு தொலைபேசி, வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டா் போன்ற சமூக ஊடகங்களில் பணம் கேட்டோ, வங்கி விவரங்கள் குறித்து கேட்டோ அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் தங்கள் விவரங்களைத் தெரிவித்து ஏமாற வேண்டாம்.
இதேபோல, மாவட்ட ஆட்சியா் எனக்கு வேண்டப்பட்டவா் எனக் கூறி வேலை வாங்கித் தருவதாக பொய் வாக்குறுதிகளை அளிப்போரை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் சைபா் கிரைம் தொடா்பான குற்றங்களுக்கு உடனடியாக பொதுமக்கள் காவல் துறையை அணுகி புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா்.