மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 15 போ் கைது
திருச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 15 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, மாவட்டம் முழுவதும் சிறப்பு பரிசோதனை மொற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டக் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், சோமரசம்பேட்டை, ஜீயபுரம், மண்ணச்சநல்லூா், இனாம்குளத்தூா், புலிவலம், திருவெறும்பூா், துவாக்குடி, நவல்பட்டு, லால்குடி, சமயபுரம், சிறுகனூா், முசிறி, துறையூா், துவரங்குறிச்சி மற்றும் வளநாடு ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.