துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
தன்பாலின செயலி மூலம் பழக்கம்; உறவுக்கு அழைத்த இளைஞரை மிரட்டி கொள்ளையடித்த நண்பர்கள்.. என்ன நடந்தது?
திருப்பூர் மாவட்டம் சங்கராபுரம் பாரதி நகரைச் சேர்ந்த 29 வயதான பிரசன்னா அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தன்பாலின உறவு தொடர்பான செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த பிரசன்னா, அதன் மூலம் ஆண் நண்பர்களிடம் பேசி வந்துள்ளார்.
அப்போது, அந்த செயலி மூலம் பிரசன்னா தனக்கு பழக்கமான ஒருவரை உறவுக்கு அழைத்துள்ளார். அந்த நபர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய பிரசன்னா அந்த செயலியில் பேசியவர் கூறிய காட்டுப்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து அந்த இளைஞரிடம் பிரசன்னா பேச்சுக் கொடுத்துள்ளார்.
அப்போது, அந்தக் காட்டுப் பகுதியின் முட்புதருக்குள் மறைந்திருந்த மற்றொருவர், பிரசன்னா கழுத்தில் திடீரென கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கசங்கிலி ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பிரசன்னா நல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பிரசன்னாவை ஏமாற்றி பணம் பறித்துச் சென்ற திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த அபிநிவாஸ் (21), மனோஜ்குமார் (21)ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில், தன்பாலின உறவுக்காக அழைத்து பிரசன்னாவின் நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
செல்போன் செயலி மூலம் தன்பாலின உறவுக்கு அழைத்த இளைஞரிடம் பணம், நகை பறித்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.