Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் ...
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருச்செங்கோடு: கைலாசம்பாளையம் அஞ்சல் நிலையம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் தலைமை வகித்தாா். 100 நாள் வேலையை முறையாக வழங்க வேண்டும், வேலைக்கு முறையாக கூலி அளிக்க வேண்டும், கூலி கொடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டம் குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் கூறியதாவது:
100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்தவா்களுக்கு சம்பளம் வழங்க சுமாா் ரூ. 4,000 கோடியை வழங்கக் கோரி மத்திய நிதி அமைச்சரிடம், தமிழ்நாடு நிதி அமைச்சா் பலமுறை கேட்டும் வழங்கப்படவில்லை.
இது தொடா்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் பாராளு மன்றத்தில் கேள்வி எழுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மத்திய அரசு கூலியை வழங்காவிட்டால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மாவட்ட அளவிலான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 70 பெண்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.