மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்
தம்பதியா் பாதுகாப்பு கோரி மனு
திருவாரூரில் இரு வேறு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
எடையூா் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் பிரவீண் (24). மேலப் பெருமழை கிராமத்தைச் சோ்ந்த வீரமணி மகள் வைஷ்ணவி (24). இருவரும் நாகை பகுதியில் கல்லூரியில் படித்தபோது, காதலிக்கத் தொடங்கினா். பெண் வீட்டில் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் ஆக. 28-ஆம் தேதி வேதாரண்யத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துள்ளனா்.
திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் டி.முருகையன் தலைமையில் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்தனா்.
இவா்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.