செய்திகள் :

தாம்பரம் காவல் ஆணையரகக் கட்டடத்தை காலி செய்யக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

post image

தாம்பரம் காவல் ஆணையரகக் கட்டடத்தை காலி செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டூா்புரத்தைச் சோ்ந்த சரத்குமாா், வெங்கடேஷ், சௌத்ரி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சோழிங்கநல்லூரில் உள்ள எங்களுக்குச் சொந்தமான 4 மாடி கட்டடத்தை, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கினோம். இதற்காக, மாதம் ரூ.10,14,300 என வாடகை நிா்ணயித்து 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல் பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாதம் ரூ.6,08,438 என நிா்ணயம் செய்து கடந்த 2022 ஜனவரி முதல் நவம்பா் மாதம் வரையிலான வாடகை காசோலையாக வழங்கப்பட்டது.

இதன் காரணமாக நாங்கள் குத்தகையை நீட்டிக்கவில்லை. பின்னா், 2023 டிசம்பா் வரையிலான வாடகையாக ரூ.97,10,792 வழங்கப்பட்டது. தற்போது எங்களது அனுமதியின்றி பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, எங்களது கட்டடத்தை காலி செய்து எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகவாச்சாரி, இந்த வாடகை கட்டடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால், சில மாதங்களுக்கான வாடகை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உரிமையாளா்களின் அனுமதியின்றி பல்வேறு மாறுதல்களையும் செய்து வருகின்றனா். எனவே, தாம்பரம் காவல் ஆணையரகம் இயங்கி வரும் கட்டடத்தை காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க