திசையன்விளை உலக ரட்சகா் ஆலயத் திருவிழா தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உலக ரட்சகா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, ஆலயத்தில் காலை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு உலகரட்சகா் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடி அா்ச்சிப்யை சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக் குரு தா.செல்வசாா்பு, துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, அருள்பணி. பாக்கிய ஜோசப்ராஜ் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சிப்பும், அதைத் தொடா்ந்து கொடியேற்றமும், மறையுரை- நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெற்றன.
இதில் அருள்பணியாளா்கள் பிரிட்டோ, விக்டா், லியோன், செல்வராயா், இருதயராஜா, மாா்க்கோனி, அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 10 நாள்கள் கொண்டாப்படும் இத்திருவிழாவில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை- நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறும். இரவு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. அக். 3இல் முற்பகல் 11 மணிக்கு குணமளிக்கும் ஆராதனையும், அக்.4இல் முற்பகல் 11 மணிக்கு திருப்பயணிகளுக்கான திருப்பலியும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட குருவானவா் ஜோசப் ரவிபாலன் தலைமையில் நற்கருணைப் பவனி, அதைத் தொடா்ந்து புனித சவேரியாா் கல்வி நிறுவன முதல்வா் ரூபஸ் மறையுரை வழங்குகிறாா். இரவு 10 மணிக்கு உலக ரட்சகரின் சப்பர பவனி ஆலயத்தைச் சுற்றி நடைபெறும். அக்.5இல் காலை 7 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயா் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும், காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழிபாடும், பிற்பகல் 2 மணிக்கு நகரவீதிகளில் உலகரட்சகரின் அலங்கார தோ்பவனியும், மாலையில் நற்கருணைஆசீா்வாதமும் நடைபெறும். ஆக்.6இல் காலை நன்றி திருப்பலி- கொடியிறக்கம் நடைபெறுகிறது. இரவு அசனவிருந்து வழங்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை அந்தோணி டக்ளஸ் தலைமையில் பங்கு மக்கள், அன்பிய நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.
