செய்திகள் :

``திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் நோக்கம்; அதனால் விஜய்யும் எங்களோடு..'' - கடம்பூர் ராஜூ

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தி.மு.க ஆட்சி, மக்களுக்கான ஆட்சி இல்லை. அவர்களின்  ஒரு குடும்பத்திற்கான ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி, மக்கள் நலன் பயக்காத ஆட்சி.

சொன்ன வாக்குகளை நிறைவாற்றாமல் ஏமாற்றிய திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தோடு அதிமுக வரும் சட்டமன்றத்  தேர்தலை அணுக இருக்கிறது.

கடம்பூர் ராஜூ

அதே கருத்தோடுதான் அன்பு சகோதரர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

வரும்  சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும். அதே நேரத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சாதாரணமாக பார்த்தாலே இந்த ஆட்சியின் குற்றங்கள் மக்களுக்கு தெரிகிறது. பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.அதனால், அந்த வகையில் பயாஸ்கோப் போட்டுக் காட்டுவதாக ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

கடம்பூர் ராஜூ

`அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டம் வழங்கப்படும்' என்று கூறி ஏமாற்றினார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவர்களை சமாதானப்படுத்த சில அறிவிப்புகளை அறிவித்தார்கள். அதனை ஏற்றுக்கொள்ள அரசு ஊழியர்கள் தயாராக இல்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். அவர்கள் முந்தைய தேர்தலில் தவறு செய்துவிட்டு தற்போது விழித்துக் கொண்டார்கள்.” என்றார்.

பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..!

சமீப காலங்களாகவ பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேருந்துகள் விபத்திற்குள்ளாகும் காட்சிகளையும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர்‌ மரணிக்கும் காட்சிகளையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க... மேலும் பார்க்க

``ஜம்மு & காஷ்மீரின் சுற்றுலா, வளர்ச்சி முக்கியமானது.." - பஹல்காமில் உமர் அப்துல்லா பேசியதென்ன?

'பஹல்காம்' என்ற வார்த்தையை அவ்வளவாகக் கேட்டிராத இந்தியா மற்றும் உலக நாடுகள், கடந்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு, அந்தப் பெயரை அடிக்கடி உச்சரித்து வருகின்றன. ஆம்... பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

Golden Dome: ``61 பில்லியன் டாலர் தர வேண்டாம்'' - ட்ரம்ப் அழைப்பு; அமெரிக்கா உடன் இணையுமா கனடா?

'கோல்டன் டோம்' - அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய ராணுவக் கட்டமைப்பு இது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார். இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகண... மேலும் பார்க்க

Doctor Vikatan: சருமத்தில் கருந் திட்டுகள், க்ரீம்கள் போட்டு பலனில்லை.. உணவுப்பழக்கம் உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில்ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை. சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உ... மேலும் பார்க்க

``ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!'' - சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...ரூபாய் நோட்டுகள் வேண்டாம்! "இப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

`Putin Playing with Fire' ட்ரம்ப் பதிவுக்கு ரஷ்யாவின் பதிலடி.. `மூன்றாம் உலகப் போர்' எச்சரிக்கையா?

'என்னுடைய நண்பர் தான்... நான் பேசுகிறேன்', 'போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு உதவுகிறேன்', 'நான் இல்லாமல் புதின் எப்படி வருவார்?' என்று தன் நண்பரான ரஷ்ய அதிபர் புதினை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தார் ... மேலும் பார்க்க