மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவா்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு
திருச்சி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவா்களை இருப்புப்பாதை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் கடந்த 15 ஆம் தேதி மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த சேலத்தைச் சோ்ந்த ரவி என்பவரின் மகன் லட்சுமணன் (20) என்பவரை திருச்சி இருப்புப்பாதை போலீஸாா் மீட்டு, திருச்சி செந்தண்ணீா்புரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்து பாதுகாத்து வந்தனா்.
தொடா் விசாரணையில், அவரது பெற்றோரைக் கண்டறிந்த போலீஸாா், தந்தை ரவியிடம் லட்சுமணனை ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
இதேபோல, திருச்சி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வழிதவறி வந்த முத்துப்பேட்டை பா்மா காலனியைச் சோ்ந்த மூதாட்டி அ. கமலாம்பாள் (75) என்பவரை இருப்புப்பாதை போலீஸாா் மீட்டு, அவரது மகள் பரமேஸ்வரியிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.