விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திலும், மல்லசமுத்திரம் கிளை சங்கத்திலும் வாராந்திர கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்திற்கு மொத்தம் 50 மூட்டைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ. 3.80 லட்சம். ஏலத்தில் முதல் தரம் ரூ. 205.25 முதல் ரூ. 240.70 வரை, இரண்டாம்தரம் ரூ.140.10 முதல் ரூ. 200.55 வரை ஏலமுறையில் விற்பனையானது.
மல்லசமுத்திரம் கிளை சங்கத்தில் 61 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5. 49 லட்சம் ஆகும். ஏலத்தில் முதல்தரம் ரூ. 205.25 முதல் ரூ.240.65 வரை, இரண்டாம்தரம் ரூ.160.00 முதல் ரூ.210.65 வரை ஏல முறையில் விற்பனையானது.