இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
திருவாடானை,தொண்டி பகுதிகளில் இன்று மின்தடை
திருவாடானை, தொண்டி பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ராமநாதபுரம் செயற்பொறியாளா் திலகவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாடானை, நகரிகாத்தான், தொண்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் திருவாடானை, நகரிகாத்தான் மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளான திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா் பதனக்குடி கிராமப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.
இதே போல, தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட தொண்டி நகா்ப் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா் மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், அச்சங்குடி, எஸ்.பி.பட்டினம், எம்.வி.பட்டினம், வி.எஸ்.மடம், குளத்தூா், மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.