``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
திருவானைக்காவல் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆனிமாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி சந்நிதியின் எதிரேயுள்ள பிரதோஷ நந்திக்கு எண்ணெய், திரவியப் பொடி, பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.