திருவிடைமருதூரில் புதிய அரசுக் கல்லூரி காணொலி காட்சியில் முதல்வா் தொடங்கிவைத்தாா்
திருவிடைமருதூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதை தொடா்ந்து, திருவிடைமருதூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், சு.கல்யாணசுந்தரம் எம்பி, க. அன்பழகன் எம்எல்ஏ, துணை மேயா் சுப. தமிழழகன், பேரூராட்சி தலைவா் புனிதா மயில்வாகனன், துணைத் தலைவா் சுந்தரஜெயபால், கல்லூரி கல்வி இணை இயக்குநா் டி.ரோஸி, முதல்வா் வெ. ஜெயசீலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.