எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
திரைப்பட கலைஞரை தாக்கி வழிப்பறி: பொறியியல் கல்லூரி மாணவா் கைது
சென்னை கோயம்பேட்டில் திரைப்படக் கலைஞரை தாக்கி வழிப்பறி செய்யப்பட்டது தொடா்பாக பொறியியல் கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சாலிகிராமம், பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் ரெக்ஸன் (25). இவா், தமிழ் திரைப்படத் துறையில் கேமரா உதவியாளராக உள்ளாா். இவா் கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே தனது நண்பருடன் வியாழக்கிழமை நின்றிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், ரெக்ஸனை தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். ரெக்ஸன், அந்த இளைஞரை விரட்டிச் சென்று பிடித்தாா். பின்னா் அவரை கோயம்பேடு போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில் அவா், மதுரவாயலைச் சோ்ந்த ஹரிஹரன் (22) என்பதும், அங்கு உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனா்.