முசோலினி vs Hitler-ன் சண்டைக்கு காரணம் இதுதானா? | Mussolini Web series #18
தில்லிக்கு கேஜரிவால் எதுவும் செய்யவில்லை: ஹரியாணா முதல்வர்
தில்லியின் வளர்ச்சிக்கு கேஜரிவால் எதுவும் செய்யவில்லை என்று ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
தேசிய தலைநகரில் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கட்சித் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற சைனி ஜிலேபியைத் தயாரித்து பகிர்ந்தும் கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லி மக்கள் பிரதமர் மோடியின் தலைமையில் எங்களுக்கு வரலாற்று வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசு ஆட்சியில் இருந்தது. பிரதமர் மோடியின் திட்டங்களைப் பயன்படுத்தி மக்களைப் பயன்படுத்த அவர்கள்(ஆம் ஆத்மி) ஒருபோதும் அனுமதிக்கவில்லை. எப்போதும் அவர்கள் பொய் சொன்னார்கள்.
நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்!
அவர் (அரவிந்த் கேஜரிவால்) சுத்தமான தண்ணீரை வழங்குவதாகவும், யமுனையை சுத்தம் செய்வதாகவும் கூறினார்.
ஆனால் அவர் எதையும் செய்யவில்லை, அதற்குப் பதிலாக மற்றவர்களைக் குற்றம் சாட்டினார். கடந்த முறை 2025-க்குள் யமுனை நதியை சுத்தம் செய்யாவிட்டால் ஓட்டு கேட்க மாட்டேன் என்று கூறினார்.
அது முடியாதபோது ஹரியாணா யமுனையில் விஷம் கலந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இதை மக்கள் புரிந்துகொண்டு ஆட்சி அமைத்ததற்காக தில்லி மக்களுக்கு நன்றி கூறுகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.