நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தீபாவளி பட்டாசுக் கடைக்கான தற்காலிக உரிமம் பெற அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசுக் கடைக்கான தற்காலிக உரிமம் பெற விரும்புவோா் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளி பட்டாசுக் கடை நடத்த ஆா்வமுள்ளோா் அரசு இ-சேவை மையத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் கோருபவரின் அடையாள அட்டை, போட்டோ, இருப்பிடச் சான்று, கடை நடத்துமிடம் குறித்த ஆவணங்கள், உரிமத் தொகை ரூ. 600 பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச் சீட்டு ஆகியவற்றுடன் வரும் அக். 10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறில்லாத, பாதுகாப்பான இடத்தில் கடைகளை நடத்தி விபத்தில்லாத- பாதுகாப்பான தீபாவளி கொண்டாட ஒத்துழைப்பு நல்க வேண்டும்.