தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.
வழக்குரைஞா்களின் தொழிலுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி காவல் துறையினருக்கு கண்டனம் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கி ஏப்.5-ஆம் தேதி வரை மேற்கொள்ள வழக்குரைஞா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா். மேலும், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.