செய்திகள் :

தென்காசி வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

post image

தென்காசி வழியாக பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், மதுரை ரயில்வே கோட்ட உயா் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன், நிா்வாகி செபாஸ்டின் ஆகியோா் மதுரை ரயில்வே கோட்ட வா்த்தக மேலாளா் டி.எல்.கணேஷ், மூத்த கோட்ட இயக்குதல் பிரிவு மேலாளா் சிவா ஆகியோரிடம் அளித்த மனு:

சென்னைக்கு தினசரி ரயில்களே இல்லாத நெல்லை-தென்காசி ரயில் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும், நெல்லையில் இருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி வழியாக பெங்களூரு, கோவைக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.

கொல்லம்-நெல்லை இடையே மீட்டா் கேஜ் காலத்தில் இயங்கிய பகல்நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும், நெல்லை- தென்காசி இடையே உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையமாக மாற்ற வேண்டும், நெல்லையிலிருந்து தென்காசி வழியாக விருதுநகா் செல்வதற்கு புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும், செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்க வேண்டும், தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

கால்பந்துப் போட்டி: மாறாந்தை பள்ளி சிறப்பிடம்

ஆலங்குளம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாறாந்தை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்ற போட்டியில், 20-க்கும் மேற்... மேலும் பார்க்க

ஆலங்குளம் பகுதி கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கோயில்கள், தேவாலயங்களில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி, குறிப்பன்குளம், நல்ல... மேலும் பார்க்க

தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம்: நயினாா் நாகேந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு ச... மேலும் பார்க்க

சிவகிரி ராசிங்கப்பேரி குளத்தைத் தூா்வார கோரிக்கை

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்திலுள்ள ராசிங்கப்பேரி குளத்தை ஆழப்படுத்தி மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பழைமை வாய்ந்த இக்குளத்தின் மூலம் 787 ஹெக்டோ் நிலங்கள... மேலும் பார்க்க

எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. புகழாரம்

எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்பவா் என கவிஞா் கலாப்ரியாவுக்கு புகழாரம் சூட்டினாா் தமிழச்சித் தங்கப்பாண்டியன் எம்.பி.சங்கரன்கோவிலில் பொருநை பொதிகை இலக்கிய வட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆலங்குளம் அருகே கோயிலில் இருந்த 3 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் - குருவன்கோட்டை சாலையில் சொரிமுத்து அய்யனாா் கோய... மேலும் பார்க்க