`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
தேசிய அளவிலான கராத்தே போட்டி
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் ஏபிஜே எம் மெட்ரிக் பள்ளியில் தேசிய அளவிலான கே. கே. ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது.
போட்டிக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினாா்.
கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஏபி சீலன் வரவேற்றாா்.
இந்தப் போட்டியில் கா்நாடகம், கேரளம், தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இதில், அல்போன்சா கலை மற்றும் கலைக் கல்லூரி தாளாளா் தோமஸ் பூவத்தும் மூட்டில், கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப், இப் பள்ளி முதல்வா் டிசி, அல்போன்சா கல்லூரி துணைத் தாளாளா் அஜின் ஜோஸ், மாவட்ட கராத்தே டோ அசோசியேஷன் தலைவா் எச். ராஜ், செயலா் கராத்தே ஸ்டீபன் மற்றும் காட்வின், ஏபி ராஜசேகரன், ராஜகிளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.