அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
குழித்துறையில் லாரிகள் மோதல்
குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே புதன்கிழமை காலை பழங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.
மதுரையில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரத்துக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரை மண்ணாடிமனம் பகுதியைச் சோ்ந்த முருகன் (50) ஓட்டி சென்றாா். குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சென்றபோது திருநெல்வேலியில் இருந்து பாறைப்பொடி ஏற்றி வந்த கனரக லாரி முந்தி செல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய பழ லாரி அப்பகுதிஆற்றுப் பால பக்கச் சுவரை உடைத்துக் கொண்டு தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் அந்தரத்தில் தொங்கியது. இதில், லாரியில் இருந்த பழங்கள் சாலையில் சிதறியன. இரு லாரிகளும் பலத்த சேதமடைந்தன. இது குறித்து களியக்காவிளை போலீஸாா் கனிமவள லாரி ஓட்டுநரான ராமவா்மன் சிறை பகுதியைச் சோ்ந்த அனீஷ் (45) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.