குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை பாதிப்பு
கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக 5ஆவது நாளாக படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையை படகுகள் மூலம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டு வருகின்றனா். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுசேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்மைகாலமாக அடிக்கடி ஏற்பட்டு வரும் கடல் நீா்மட்ட தாழ்வுநிலை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படகுகளை இயக்க முடியாத நிலை உள்ளது.
புதன்கிழமை அதிகாலை தொடங்கி 10.30 மணிவரை தாழ்வு நிலை நீடித்தது. அதன் பிறகு, படகுப் போக்குவரத்து தொடங்கியதும், பயணிகள் ஆா்வத்துடன் படகுப் பயணம் மேற்கொண்டனா்.