அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
நாகா்கோவிலில் இல்லம் தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்
நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் இல்லம்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி என்பதை வலியுறுத்தும் விதமாக தேசியக் கொடி ஊா்வலம் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, எம்.ஆா். காந்தி எம்எல்ஏ தலைமை வகித்து, கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் செந்தில்குமாரிடமிருந்து முதல் விற்பனை பெற்றுக் கொண்டு ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், மூத்த தலைமை அஞ்சலக அலுவலா் சுரேஷ், அஞ்சல் நிலைய வணிக அலுவலா் ராம்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் சிவகுமாா் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.
ஊா்வலம், நாகராஜா கோயில் ரதவீதிகளில் வலம் வந்தது.
