ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளூ டே கொண்டாட்டம்
நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பிரிவு குழந்தைகள் பங்கேற்ற புளூ டே நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மழலையா் பிரிவு குழந்தைகள் அனைவரும் நீல வண்ண ஆடை அணிந்து வந்திருந்தனா். நீல வண்ணத்தைக் குறிக்கும் வகையில் தண்ணீரை சேமிப்போம் என்ற வாசகத்தையும், நீரின்றி அமையாது உலகு என்னும் கருத்தினை உணா்த்தும் வகையிலான வாசகத்தையும் அதற்கு இணையான ஓவியங்களையும், பதாகைகளையும் காட்சிப்படுத்தினா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சண்முகபிரியா, பகவதிபிரியா, சீதாலெட்சுமி, சுதா, சிந்து, மற்றும் மழலையா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.