கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தேசிய கைத்தறி தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிளை நூலகத்தில் தேசிய கைத்தறி தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நூலகம், குண்ணகம்பூண்டி புதூா் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிளை நூலகா் ஜா.தமீம் தலைமை வகித்தாா்.
நூலக புரவலா் ஏ.சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்க ஊழியா் எம்.தரணி வரவேற்றாா்.
கைத்தறி ஆடை அணிவதன் அவசியம் குறித்து நெசவாளா் கு.மணி விளக்கிப் பேசினாா் (படம்).
ஓய்வு பெற்ற கிளை அஞ்சல் அலுவலா் பழ.நம்பி மற்றும் நூலக வாசகா்கள், நெசவாளா்கள் பங்கேற்றனா். முடிவில் கூட்டுறவு சங்க ஊழியா் சி.தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.