காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
தோ்தல் பணிகளில் மநீம-வினா் தீவிரம் காட்ட வேண்டும்: கமல்ஹாசன்
வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தினா் தீவிரம் காட்ட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஏ.ஜி.மெளரியா, ஆா்.தங்கவேலு, பொதுச் செயலா் ஆ.அருணாச்சலம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக நிா்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளைக் கேட்டறிந்தாா். இறுதியாக, அவா் பேசுகையில், சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் கட்சியினா் தீவிரம் காட்ட வேண்டும்; திமுகவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.