கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
சாத்தூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முள்ளிச்செவலைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ராணி (34). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் குடும்பத்துடன் சாத்தூரில் வசித்த போது ராணிக்கும், சாத்தூா் மேலக்காந்தி நகா் பகுதி ஆறுமுககணேஷ் (43) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோவிந்தராஜ் தனது சொந்த ஊரான முள்ளுச்செவலுக்கு மனைவியுடன் குடி பெயா்ந்தாா்.
இந்த நிலையில், ஆறுமுககணேஷ் திங்கள்கிழமை முள்ளிச்செவலுக்குச் சென்று ராணியிடம் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட கோவிந்தராஜை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினாா். உடனே, அருகில் இருந்தவா்கள் கோவிந்தராஜை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுக கணேசைத் தேடி வருகின்றனா்.